India defence chief:இந்தியாவின் நெம்பர் 1 எதிரி நாடு இதுதான்.. பாதுகாப்பு படைத் தளபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2021, 10:22 AM IST
Highlights

இந்தியாவின் நம்பர் ஒன் எதிரி  சீனா என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை, வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல் என்பது மிகவும் பெரியது, இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சீனாதான், 

இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா இருந்து வருகிறது என்றும், அது பாகிஸ்தானை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும்,அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் கடற்பரப்பால் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க அந்நாடு தயாராக உள்ளது என்றும் இந்திய பாதுகாப்பு படை தலைவர் ஜெனரல் பிபின் ராவத் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 எதிரி யார் என தொலைக்காட்சி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். கடந்த 2019 டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா மட்டும் கொரோனாவுடன் சேர்த்து சீனா என்ற தீய சக்தியையும் எதிர்த்து போராடிக் கொண்டிருந்தது என்றால் அது மிகையாகாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்தியாவும் சீனாவும் மிக நீண்ட நெடிய எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளாக உள்ளன, நேபாளம், சிக்கிம், பூட்டான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைகளில் இரு நாடுகளுக்கும் மோதல் என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 

குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் பகுதி என்று கூறிவருவதுடன் இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. ஆனால் சீனாவுக்கு  பதிலடியாக இந்தியாவும் தனது எல்லையில் படைகளை குவித்து  பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது, இந்நிலையில் கடந்த 2019ஆம்  கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் இந்தியா கொடுத்த பதிலடியில் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சீனா அது குறித்து எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே இதை நிலை நீடித்தால், இருநாடுகளுக்கும்  இடையே போர் ஏற்படக்கூடும் என ஒட்டு மொத்த உலக நாடுகளும் அலறின, ஆனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் நடத்திய 13 கட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக கால்வான் பள்ளத்தாக்கிலிருந்து இரு நாடுகளும் படைகளும் பின் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனா தனது படைகளை மெல்லமெல்ல திரும்பப் பெற்று வருகிறது. ஆனாலும் முழுவதுமாக இன்னும் படைகளை வாபஸ் பெறவில்லை என தகவல்கள் வெளியாகி வருகிறது.

பின் வாங்குவது போல பின்வாங்கி மீண்டும் தாக்குதல் நடத்துவது சீனாவின் முக்கிய யுக்திகளில் ஒன்று என்பதால் அந்நாட்டின் மீதான சந்தேகப் பார்வை தொடர்ந்து நீடிக்கிறது, எல்லையில் பதற்றம் உச்சத்தில் இருந்தபோதே சீன தேசிய சபையில் பரபரப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது, சீனாவின் இறையாண்மை, அமைதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு புனிதமானது மற்றும் மீறமுடியாதது என்று அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் எல்லை பகுதிகளை பாதுகாப்பதற்காக சீன அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும், எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், எல்லைப்பகுதிகளில் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு வழங்கிட இந்த திட்டம் வழிசெய்யும், அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்சனைகளில் சுமூக தீர்வு காண இந்த சட்டம் வழிவகை செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சீனா தனது அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளிடன் மட்டும் தொடர்ந்து பிரச்சினையை செய்து வருகிறது. இந்தியா-சீனா இடையே உள்ள 3 ஆயிரத்து 488 கிலோமீட்டர் தூர எல்லை கட்டுப்பாடு கோட்டில் தொடர்ந்து பிரச்சனை நிலவுகிறது.  பூடான், சீனா இடையே 400 கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லையில் பிரச்சினைகளை உள்ளது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி உள்ளதாகவும், அங்கு சீனர்களை குடியேற்றத்திட்டம் வைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஆங்கில தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி  கொடுத்தார், அப்போது, இந்தியாவின் நம்பர் 1 எதிரி யாரென்று அவரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:- இந்தியாவின் நம்பர் ஒன் எதிரி  சீனா என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை, வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல் என்பது மிகவும் பெரியது, இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சீனாதான், அந்த அச்சுறுத்தல் பாகிஸ்தானை விட மிகப் பெரியது, நிலபரப்பு அல்லது பரந்து விரிந்த கடல் பரப்பு போன்றவை எந்த ஒரு அசம்பாவிதத்தையும் சமாளிக்க அந்நாடு தயாராக உள்ளது என்றார். அதேபோல் எந்த ஒரு அசம்பவிதத்திற்கும் நாங்களும் தயாராக இருக்கிறோம், அவர்கள் மீண்டும் ஒரு கல்வான் போன்ற சம்பவத்தை நடத்த விரும்பினால், அவர்களுக்கு ஏற்கனவே கொடுத்தது போல பன்மடங்கு பதிலடி கொடுக்கப்படும் என்றார். ஆனால் சீனா தனது உட்கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் உருவாக்கி வைத்திருக்கிறது, அதே போல் இந்தியாவும் தனது ஆயுதப் படைகளை மிக உயரமுள்ள பிராந்தியங்களில் நிலை நிறுத்தியுள்ளது. குளிர்காலத்தில் முன்நோக்கி செல்லும்  மிகப் பெரிய படையை இந்தியா தயாராகவைத்துள்ளது.  எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளும் வரை இந்தியாவும் படைகளை பின்வாங்காது.

நாங்கள் ஏற்கனவே குளிர்காலத்திற்கான உணவுப்பொருட்களையும், தளவாடங்களையும் சேகரித்து வைத்திருக்கிறோம், எதிரி ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டால் அதை ஆக்ரோஷத்துடன் எதிர்ப்பதற்கு போதுமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது, சீனா மீண்டும் எல்லை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பற்றி நாங்கள்  பயப்பட வில்லை, ஒரு போதும் நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம், அவர்கள் என்ன நடவடிக்கைகள் ஈடுபடுகிறார்களோ, அதேபோல இந்தியாவும் ஈடுபடும் இரு தரப்பினரும் பரஸ்பரம் சந்தேகப்பார்வை இருத்து வருகிறது. இந்தியா ஒருபோதும் தனது பாதுகாப்பை குறைக்காது என அவர் கூறினார். 
 

click me!