ஏற்றுமதியில் ஜி7 நாடுகளை அடித்து பின்னுக்கு தள்ளிய இந்தியா..!! ஸ்கெட்ச் போட்டு தட்டி தூக்கிய மோடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2021, 1:40 PM IST
Highlights

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே சமீபகாலமாக எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையிலும் அதற்கு நேர் மாறாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 

கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியிலும் இந்தியா ஏற்றுமதியில் ஜி7 நாடுகளை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை  மத்திய அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சாதனையானது கொரோனா உச்சத்திலிருந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூலைக்கு இடையில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது, இந்தியா இந்த வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 2020 ஆண்டு கொரோனா கோர தாண்டவம் இந்தியாவில் மிகக் கடுமையாக இருந்தது, நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது, அனைத்து துறைகளும் முடங்கியது, குறிப்பாக ஏற்றுமதி என்கிறதுறை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

 ஆனால் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை, ஊரடங்கு நடைமுறையில் இருந்தும் ஏற்றுமதி சார்ந்த இயக்கம் சீராகவே இருந்தது, அது தொடர்ந்து சீராக இயங்கியதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் 5.7 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 2019-20 நிதி ஆண்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பை விட 11 சதவீதம் அதிகம். அதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 30.63  பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 10.36 பில்லியன் டாலர் ஆகும்,

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்தால் இந்தியாவின் ஏற்றுமதி மிக கடுமையாக சரியும் என பல நாடுகள் விமர்சித்தன, அதே நேரத்தில் பல நாடுகள் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தடைவிதித்தன, அந்நிலையிலும் இந்தியாவின் ஏற்றுமதி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டதால், ஏற்றுமதியிலும் நாம் எதிர்பாராத வளர்ச்சி அடைந்ததாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. கொரோனா காலத்திலும் இந்தியாவின் உணவுப் பொருட்களான மிளகு, மஞ்சள், ஏலக்காய் மற்றும் பல்வேறு நறுமணப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதே போல பல்வேறு நாடுகள் இந்தியாவில் விளையும் காய்கறி, பழவகைகள் மீது அதிக ஆர்வம் காட்டியதால் அவைகளும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே சமீபகாலமாக எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையிலும் அதற்கு நேர் மாறாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதிக அளவில் இந்தியாவில் இருந்து சீனா ஸ்டீல் இறக்குமதி செய்துள்ளது. மொத்தத்தில் கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூலை வரையில் இந்தியா ஏற்றுமதியில் 47% வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்தியாவில் இந்த வளர்ச்சி முன்னேறிய நாடுகள் என்றும், வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட 7 நாடுகள் என்று கூறப்படும் G7 (growth of 7) என்ற நாடுகளையே  பின்னுக்கு தள்ளியுள்ளது. அதில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகளை காட்டிலும் இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் முன்னிலை பெற்றுள்ளது.

(2020 ஜனவரி - 2021 ஜூலை) ஆகிய இடைப்பட்ட காலத்தில் ஏற்றுமதியில் பிரிட்டன் 20% , அமெரிக்கா 24%,  ஜப்பான் 25%, ஜெர்மன் 26% பிரான்ஸ் 27%, கனடா  32%, இத்தாலி 33% , ஏற்றுமதியில் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  ஆனால் இந்த அத்தனை நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா ஏற்றுமதியில் 47% முன்னிலையில் உள்ளது குறிப்பிடதக்கது.
 

click me!