திமுக எம்.பி.க்கு நவம்பர் 9 வரை ஜெயில்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Oct 27, 2021, 12:51 PM IST
Highlights

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் பணியாற்றிவந்த ஊழியர் கோவிந்தராசு மா்மமான முறையில் உயிரிழந்தார். கோவிந்தராசை திமுக எம்.பி. ரமேஷ் அடித்துக்கொன்றதாக கோவிந்தராசின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் பணியாற்றிவந்த ஊழியர் கோவிந்தராசு மா்மமான முறையில் உயிரிழந்தார். கோவிந்தராசை திமுக எம்.பி. ரமேஷ் அடித்துக்கொன்றதாக கோவிந்தராசின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் நடந்த விசாரணையின் முடிவில், அந்த கம்பெனியில் பணியாற்றிய 5 ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான  வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. 

 

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்டர் அடைந்தார். இதனையடுத்து, கடந்த 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரான ரமேஷை 13ம் தேதி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இதனையடுத்து, கடலுார் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 27ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று மீண்டும் ரமேஷின் காவலை நவம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

click me!