திமுகவை வழிநடத்துவதே நான் தான்... அது என்னோட பி.டீம்... போட்டுத்தாக்கிய சீமான்..!

Published : Oct 27, 2021, 12:41 PM IST
திமுகவை வழிநடத்துவதே நான் தான்... அது என்னோட பி.டீம்... போட்டுத்தாக்கிய சீமான்..!

சுருக்கம்

பாஜக வேல் யாத்திரை நடத்தும்போது திமுகவின் முரசொலி பத்திரிக்கை தலையங்கத்தில் அதனை வாழ்த்தி எழுதியிருந்தார்கள். அதன் பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதியும் வேல் பிடித்து நின்றார்கள். 

சுப.வீரபாண்டியன், திருமாவளவன், ராமதாஸ் ஆகியோர்தான் என்னை தமிழ்தேசியத்திற்குள் என்னை தள்ளிவிட்டனர் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி தலைமையகம் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், ‘’நான் வேல் தூக்கும்போது அனைவரும் விமர்சித்தார்கள். ஆனால் அதே பாஜக வேல் யாத்திரை நடத்தும்போது திமுகவின் முரசொலி பத்திரிக்கை தலையங்கத்தில் அதனை வாழ்த்தி எழுதியிருந்தார்கள். அதன் பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதியும் வேல் பிடித்து நின்றார்கள். அப்படியானால் அவர்களுக்கு எல்லாம்  வழிகாட்டியதாக நான் தானே இருக்கிறேன். அப்படியானால் திமுக தான் என்னோட பி டீம். 

முல்லை பெரியாறு அணையை மூட வேண்டும் என கேரள நடிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், இங்கு உள்ள நடிகர்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இங்கு உள்ளவர்கள்  நடிகர்களே கிடையாது. விஷாலை நான் நடிகராக ஏற்றுக் கொள்கிறேன். நடிகர் சங்கத் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன். தயாரிப்பாளர் சங்க தலைவராக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், தெலுங்கில் பிரகாஷ் ராஜை ஏற்றுக் கொள்ளவில்லையே... அவர் இனி அங்கு நடிக்கப்போவதில்லை எனக் கூறியே விட்டார். 

கேரளர்கள் நீர் தர மறுத்தால் தமிழகத்தில் இருந்து சோறு செல்ல விடமாட்டோம். எப்படி பார்த்தாலும் எனக்கு ஓட்டு போடப்போறதில்ல. அதப்பற்றி நானும் கவலைப்படப்போவதில்லை. ஆனால் ஒரு நாள் எவன் நல்லவன்னு உனக்கு தெரியும். அன்னைக்கு நீ என்னைத் தேடுவ. இருந்தா உங்கூட வாரேன். இல்லைனா போ.

என்னை தமிழ்தேசியத்துக்கு தள்ளிவிட்டது யார் தெரியுமா..? எங்கண்ணன் சுப.வீரபாண்டியன், திருமாவளவன், எங்கய்யா ராமதாஸ். இல்லை என்று மறுக்கச் சொல்லுங்கள்? என்னை இறக்கி விட்டுவிட்டு அவர்கள் போய்ட்டாங்க. பயிற்சி கொடுத்த பிடி வாத்தியார் வீட்டுக்கு போய்ட்டார். நான் ஓடிக்க்கிட்டு கிடக்கிறேன்’’ என அவர் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!
திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!