ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குட்நியூஸ்... அமைச்சர் பெரிகருப்பன் முக்கிய அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 24, 2021, 7:28 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி பொது பட்ஜெட்டும் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு துறை வாரியாக, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி பொது பட்ஜெட்டும் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு துறை வாரியாக, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியம் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

மேலும், ரூ.2,097 கோடி மதிப்பில் ஊரக சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும். 12,125 நூலங்கங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும். ரூ.233 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கிராம ஊராட்சி கட்டங்கள் கட்டி முடிக்கப்படும். சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும். பெண் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகரித்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!