ஒற்றை வீடியோவில் டேமேஜ் ஆன பர்ஃபெக்ட் கிளீன் ராகவன்.. DGPஅலுவலகத்தில் கைது செய்ய சொல்லி கதறிய பெண் MP.

Published : Aug 24, 2021, 06:02 PM ISTUpdated : Aug 25, 2021, 10:06 AM IST
ஒற்றை வீடியோவில் டேமேஜ் ஆன பர்ஃபெக்ட் கிளீன் ராகவன்.. DGPஅலுவலகத்தில் கைது செய்ய சொல்லி கதறிய பெண் MP.

சுருக்கம்

பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி ராகவனுடைய ஆபாச பாலியல் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தமிழக காவல் துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி ராகவனுடைய ஆபாச பாலியல் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தமிழக காவல் துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார். இது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

தமிழக பாஜகவின்  மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராகவும், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பாஜகவின் கருத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பவராகவும் செயல்பட்டு வந்தவர் கே.டி ராகவன். இவர் அக்கட்சியில் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், அவர் குறித்து ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

எப்போதும் வெரி டீசண்ட், பர்ஃபெக்ட் கிளீன் என பெயரெடுத்த ராகவனா இப்படி கேவலமான காரியத்தை செய்தது என சொந்த கட்சிக்காரர்கள் முதல் மாற்று கட்சிக்காரர்கள் வரை வாய்பிளக்கும் அளவுக்கு அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்த கட்சி பதவியை அவர் ராஜனாமா செய்துள்ளார். அக்கட்சியன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் பாஜகவையும் அக்கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி பிரதிநிதியுமான ஜோதிமணி கே.டி ராகவனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாருக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி ராகவனுடைய ஆபாச பாலியல் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் இதுபோன்ற புகார்கள் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது எழுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க-வினருக்கு எதிராக பல்வேறு புகார்கள் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் இழைக்கப்பட்டுள்ளதை வெளிக்கொண்டு வந்துள்ளது. கே.டி ராகவன் உட்பட பா.ஜ.க-வினர் யார் யாரால் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை முறையாக விசாரணை நடத்தி நியாயம் பெற்றுத் தரவேண்டும். இந்த அரசில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும் என முதலமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளதன் அடிப்படையில், காவல்துறை இயக்குநரை சந்தித்து முறையாக புகார் அளித்துள்ளோம். 

இந்த ஆட்சியில் பெண்களுக்கு தேவையான ஞாயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பா.ஜ.க-வினரால் பெண்கள் பெருமளவில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!
கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!