முதல்வரை அறைந்திருப்பேன் என பேசியதால் சர்ச்சை.. 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சர் கைது..!

By vinoth kumarFirst Published Aug 24, 2021, 5:06 PM IST
Highlights

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார். 

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசுகையில்;- சுதந்திர தின விழா உரையின்போது மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார். 

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன. பாஜக தொண்டர்களுக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் பல இடங்களில் மோதலும் ஏற்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் நாராயண் ரானே பல்வேறு காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டாலாம் என்ற தகவல் வெளியானது. 


 
இந்த சூழலில் தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சர் நாராயண் ரானே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போது நாராயண் ரானே மகாராஷ்டிரா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், மகாராஷ்டிராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் மத்திய அமைச்சர் நாராயண் ரானே என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!