இந்தியாவுக்கே வழிகட்டி... மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. கே.என்.நேரு புகழாரம்..!

Published : Aug 24, 2021, 04:40 PM IST
இந்தியாவுக்கே வழிகட்டி... மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. கே.என்.நேரு புகழாரம்..!

சுருக்கம்

ஒட்டு மொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக முதலமைச்சரின் திட்டங்கள் இருப்பதால் பிரதமராகும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது

ஒட்டு மொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக முதலமைச்சரின் திட்டங்கள் இருப்பதால் பிரதமராகும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மானிய கோரிக்கை பதிலுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் இதனை தெரிவித்தார்.  இன்று  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் துறை சார்பில் அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி,  தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி ஆகிய 5 நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து, பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், தாராமங்கலம், திருத்துறை பூண்டி, கடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவித்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!