என்ன போய் ஜாதி வெறியனு ஊரெல்லாம் பேச வச்சுட்டீங்களேடா... பி.சி.ஆரை முன் வைத்து #ருத்ரதாண்டவம்

Published : Aug 24, 2021, 05:54 PM IST
என்ன போய் ஜாதி வெறியனு ஊரெல்லாம் பேச வச்சுட்டீங்களேடா... பி.சி.ஆரை முன் வைத்து #ருத்ரதாண்டவம்

சுருக்கம்

இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை பழிவாங்குவதற்காகவும், மிரட்டவும் தவறாக பயன்படுத்தி ஒரு தரப்பினர் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நாடு முழுவதும் இருந்து வருகிறது. 

திரெளபதி படத்தை இயக்கிய ஜி.மோகன் இயக்கிய அடுத்த படம் ருத்ரதாண்டவம். திரெளபதி படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்து இருந்ததால் அது சாதி சார்ந்த படம் என எதிர்த்தரப்பினர்  விமர்சித்தனர்.

அதேபோலவே ருத்ரதாண்டவமும் சாதிய கருத்துக்களை முன் வைத்து பேசுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த முறை நாடக காதலை பற்றி பேசாமல், வன்கொடுமை சட்டம் என்னும் பி.சி.ஆர் சட்டத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எதிர் சமூகத்தை பழி வாங்க எப்படி பயன்படுத்துகிறது என்பதை முன் வைத்து இந்தப்படத்தில் கருத்து கூறியுள்ளனர். மதம் மாறினாலும், தான் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவன் என்பதை முன் வைத்து அந்த பிசிஆர் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் எதிர்தரப்பினர் எப்படி பழிவாங்கப்படுகின்றனர் என்பதை முன் வைத்துள்ளனர்.  

ருத்ரதாண்டவம் பட ட்ரெய்லரில், ‘’நான் என் வேலைய மட்டுந்தானடா பார்த்துட்டு இருந்தன் என்ன போய் ஜாதி வெறியனு ஊரெல்லாம் பேச வச்சு எதுக்குடா இந்த கேவலமான அரசியல். கிருஷ்துவ மதம் மாறிய ஒருவரின் மரணத்திற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி, பிசிஆர் சட்டம் செல்லாது.  மதம் மாறிட்டா சாதியை பயன்படுத்தக் கூட்டாது என்கிற விழிப்புணர்வு வந்துவிட்டால் எவன் மாறுவான்..? இங்கே மதத்தை விட சாதிக்குத்தான் முக்கியஹ்துவம் புதுசா எவனும் மாறவும் மாட்டான். மாறியவனும் யோசிக்க ஆரம்பித்து விடுவான்.

 

இது சாதாரண கேஸ் இல்ல. இந்தியாவில் இன்னைக்கு இருக்கிற பிரச்னை. இந்தியாவில் நாம கும்பிடுகிற சாமியை பிசாசுனு வெளியில சொல்லிக்கிட்டு அலையுறவன்களை எல்லாம் நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடலாம்’’என்கிற வசனங்கள் மூலம் இது பி.சி.ஆர் சட்டத்தை முன் வைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த பிசிஆர் சட்டத்தை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பல முறை வழியுறுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை பழிவாங்குவதற்காகவும், மிரட்டவும் தவறாக பயன்படுத்தி ஒரு தரப்பினர் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நாடு முழுவதும் இருந்து வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்