அப்படிபோடு.. முன்னாள் எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

By vinoth kumar  |  First Published Apr 20, 2023, 6:32 AM IST

இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். 


தமிழகத்தில் முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் படி அதிகரிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்;- சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்திருக்கிற கோரிக்கையின் அடிப்படையிலே, இப்போது அரசுக்கு இருக்கக்கூடிய நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப, ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.  

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு.! சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம் - எதிர்த்து நின்ற பாஜக

அதனடிப்படையில், பின்வரும் அறிவிப்புகளை அறிவிப்பதில், உங்களோடு சேர்ந்து நானும் ஓரளவிற்கு மகிழ்ச்சி அடைந்து, அவற்றை அறிவிக்கிறேன். முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூபாய் 25 ஆயிரம் என்பது, ரூபாய் 30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும். 

இதையும் படிங்க;-  தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்... திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!!

அதேபோல், தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 12,500/- என்பது, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தப்படும்.  அதேபோல், முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை  உறுப்பினர்களுக்கு, தற்போது ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாய் என்பது, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!