மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்.. ஓய்வூதியம், பராமரிப்பு உதவித்தொகை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

By vinoth kumar  |  First Published Mar 20, 2023, 12:37 PM IST

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக  மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 


மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக  மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரையே முத்தமிழறிஞர் கலைஞர்தான் சூட்டினார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இந்தத் துறை மிக முக்கியமானது என்பதால், முதலமைச்சர் அவர்கள் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்து பணிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். உலக வங்கி நிதியுதவியுடன் 1,763 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் (RIGHTS Project) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய்..! செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம், 202324 ஆம் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும். மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தன்னார்வலர்களைக் கொண்ட 150 அண்மை மையங்கள் உருவாக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 6.84 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்திட முதலமைச்சர் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள். இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 1,444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் உத்தரவாதம், வட்டி மானியம் ஆகியவற்றை மாநில அரசு வழங்கி வருகிறது.

இதையும் படிங்க;- இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?

இதன் பயனாக 11,155 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத் திறனாளிகளின் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக 50 கோடி ரூபாய் கடனுதவியை இந்த ஆண்டில் முதல் இடத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. அரசுத் திட்டங்களின் பலன்கள் முழுமையாக மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைய, மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் 9,08,000 பேர்களின் விவரங்களை கொண்ட தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

click me!