போரில் உயிரிழக்கும் தமிழக ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்வு..!

By vinoth kumar  |  First Published Mar 20, 2023, 11:53 AM IST

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இதில், குறிப்பாக பாதுகாக்கும் படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் வகையில், போர் நடவடிக்கைகளின் போது உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 இலட்சம் ரூபாயிலிருந்து, இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும். 

Latest Videos

மேலும், வீரதீரச் செயல்களுக்கான உயர் விருதுகளைப் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினருக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத்தொகையும் நான்கு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!