தமிழக பட்ஜெட் தாக்கல்..! தமிழ் வளர்ச்சி, விளையாட்டு துறை,கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் இதோ

By Ajmal Khan  |  First Published Mar 20, 2023, 10:41 AM IST

சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் பிடிஆர், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாடுமுழுவதும் ஆயிரம் கேலோ இந்தியா விளையாட்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என கூறினார். 


தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை  சட்டபேரவையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என கூறினார். அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் ரூ.5 கோடி மானியத்துடன் தமிழில் மொழிபெயர்ப்பு மொழிபெயர்க்கப்படும் எனவும், சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் பிடிஆர் அறிவித்தார். 

Latest Videos

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்..! ஓபிஎஸ், ஈவிகேஎஸ்க்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கீடு தெரியுமா..? வெளியான தகவல்

புதிய அறிவிப்புகள்

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க  11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார். வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி 40 லட்சமாக அதிகரிக்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் 273 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் திமுக ஆட்சி பதவியேற்ற போது ரூ. 68,000 கோடி வருவாய் பற்றாக்குறை தற்போது ரூ. 30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 8,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறபக்கப்படும் எனவும் கூறினார். 

பட்ஜெட்டை புறக்கணித்த அதிமுக.! ஈரோடு தேர்தல் முறைகேடு, ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்த்து முழக்கம்

விளையாட்டு மைதானம்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும் என தெரிவித்தவர், சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும் என கூறினார். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாடுமுழுவதும் ஆயிரம் கேலோ இந்தியா விளையாட்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும். சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

click me!