பட்ஜெட்டை புறக்கணித்த அதிமுக.! ஈரோடு தேர்தல் முறைகேடு, ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்த்து முழக்கம்

By Ajmal KhanFirst Published Mar 20, 2023, 10:06 AM IST
Highlights

தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஓபிஎஸ்க்கு எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்ஜெட்டை அதிமுக புறக்கணித்தது.
 

தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை  சட்டபேரவையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார். இதனையடுத்து தனது உரையை அமைச்சர் பிடிஆர் வாசிக்க தொடங்கியதும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். பேசுவதற்கு வாய்ப்பு தருமாறு சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால் பட்ஜெட் உரை வாசிக்கும் போது அனுமதி வழங்கமுடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

வெளிநடப்பு செய்த அதிமுக

இதனையடுத்து அதிமுகவினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகர் அப்பாவு அனைவரும் அமைதியாக அமருங்கள், அமருங்கள் என தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். இருந்த போதும் அதிமுகவினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, நிதி அமைச்சர் பேசியதை தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என தெரிவித்தார்.  இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை நடப்பதாக குற்றம் சாட்டியவர்கள், உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு பிறகும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர்கட்சி துணை தலைவர் பதவிக்கான இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றதாகவும் குற்றம்சாட்டினர்.

இதையும் படியுங்கள்

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்..! ஓபிஎஸ், ஈவிகேஎஸ்க்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கீடு தெரியுமா..? வெளியான தகவல்

click me!