பழங்களை வீசி ஏறிந்த பக்குவம் இல்லாத ஆணையாளர்.!! சீறும் நாம்தமிழர் கட்சி சீமான்.!!

By T BalamurukanFirst Published May 13, 2020, 8:33 PM IST
Highlights

சாலையோர கடை வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரி மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சாலையோர கடை வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரி மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

வாணியம்பாடி  உழவர் சந்தை அருகில் நகராட்சி ஆணையர் 'சிசில் தாமஸ்' என்பவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விதிமுறைகள் மீறி தள்ளுவண்டிக் கடைகள் வைத்துள்ளதாக கூறி,தள்ளுவண்டிகளில் வைத்திருந்த வாழைப்பழம் மற்றும் இதர பழங்களை தூக்கி வீசி எறிந்தார். இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது.

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. கடுமையான கண்டனங்களும் குவிந்தன. விஷயம் பெரிதானதால் அந்த கமிசனர் மன்னிப்பு கேட்டார்.அந்த பொருள்களுக்கான இழப்பீட்டையும் வியாபாரிகளுக்கு வழங்கினார்.

இதுகுறித்து, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சாலையோரக் கடைகள் விதிமுறைகள் மீறி வைத்திருந்தாலும் அந்த விஷயத்தில் சட்டப்படி அதிகாரிகள் நடக்க வேண்டும்.


ஆனால், அதற்கு மாறாக மனிதநேயமற்று நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டின் அடிப்படையில் கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

click me!