வெளிநாடுகளிலிருந்து தமிழர்கள் திரும்பணும்...விமான சேவையை உடனே ஏற்பாடு பண்ணுங்க...வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published May 13, 2020, 8:29 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கின் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து  ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் மே 7 முதல் 5 நாட்களுக்கு ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக விமானங்களை இயக்கின. இந்த விமானங்கள் மூலம் 6,037 இந்தியர்கள்  தாய் நாடு திரும்பினர். இதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை இந்தியா திரும்ப அழைத்து வர 64 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
 
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், உடனடியாகத் தமிழகம் திரும்ப வசதியாக தமிழ்நாட்டிற்கான விமானச் சேவையை விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கின் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து  ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் மே 7 முதல் 5 நாட்களுக்கு ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக விமானங்களை இயக்கின. இந்த விமானங்கள் மூலம் 6,037 இந்தியர்கள்  தாய் நாடு திரும்பினர். இதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை இந்தியா திரும்ப அழைத்து வர 64 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

ஆனால், ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின்படி வெளி நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு சேவை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வலியுறுத்தியுள்ளார். “வந்தே பாரத் மிஷனின் இந்தப் பயண அட்டவணையில் தமிழ் நாட்டிற்கு விமானச் சேவை வழங்கப்படவில்லை என்பதை மிகுந்த கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், உடனடியாகத் தமிழகம் திரும்ப, தமிழ்நாட்டிற்கான விமானச் சேவையை விரைந்து ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

click me!