10ம் வகுப்பு பொதுத் தேர்வு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையை படி நடத்த வேண்டும்.! ஆசிரியர் சங்கம் கோரிக்கை.!

By T BalamurukanFirst Published May 13, 2020, 8:05 PM IST
Highlights

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தமிழக கல்வித்துறை நாள் குறித்துள்ளது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் முதல் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேர்வு நடத்துவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான காலத்தை தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
 


10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தமிழக கல்வித்துறை நாள் குறித்துள்ளது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் முதல் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேர்வு நடத்துவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான காலத்தை தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியர் அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் நீ. இளங்கோ பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரானா தொற்று பரவலைத் தொடர்ந்து பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டது  பொது முடக்கம் காரணமாக மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் ஆழ்ந்து வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். உணவு, வேலை இல்லாமல் பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர். 

 பல்கலைக்கழக மானியக் குழு கூட மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம்  குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு சலுகைகளோடு  தேர்வுகளை நடத்திட ஓர் வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழகங்களுக்கு  வழங்கியுள்ளது.அதில் அகமதிப்பீட்டு முறையை 50 விழுக்காடு மதிப்பெண்ளுக்கு கணக்கில் கொள்ளலாம். மீதம் உள்ள 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு   முந்தைய பருவத் தேர்வு உட்பட பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மேலும் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

இத்தகைய தேர்வுகளை நடத்திட  ஜூலை மாதத்தையே அது பரிந்துரை செய்துள்ளது.    ஆனால் கொரானா தொற்று தொடர்ந்து ஏறு முகமாக இருக்கும் இந்த நேரத்தில்  பத்தாம் வகுப்பிற்கு   பொதுத் தேர்வு என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களிலும் தேர்வுகள் பற்றிய திட்டமிடுதல் இல்லை. கொரானாவின் தாக்குதல்,  அச்சம்,  பீதி, நிச்சயமற்ற நிலை, பெற்றோர்கள் வருவாய் இழப்பு  போன்ற வற்றின் ஊடாக தேர்வுகள் பற்றியே சிந்திக்க முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். இது போன்ற சூழ் நிலையின்  காரணமாக செய்வது அறியாது நிற்கும் பெற்றோர் மாணவர் மனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


 எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தேதியை திரும்ப பெற வேண்டும்., பள்ளிகள் செயல்படத் தொடங்கிய இரண்டாவது வாரங்களில் தேர்வுகளை நடத்த திட்டமிட வேண்டுகிறோம். பல்கலைக்கழக மானியக் குழு ஓர் நிபுணர் குழு அமைத்து அதன் அடிப்படையில் முடிவு செய்ததைப் போன்று, பள்ளிக் கல்வித் துறை ஓர் நிபுணர்கள் குழு அமைத்து அதன் முடிவுகள்படி பத்தாம் வகுப்பு தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.கோவிட் 19 க்கா பள்ளி மூடியதில் இருந்து மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் தேர்வுக்கான பயிற்சி எதுவும் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவது  மிகவும் சிரமமாக இருக்கும்

மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோவிட் 19 குறித்து விழிப்புணர்வு எவ்வளவு தூரம் ஏற்பட்டுள்ளது என்பதும் கேள்விக்குறியே. இச் சூழலில் அவர்கள் பாதுகாப்பு முறைகளைக் கையாளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மாணவர்களுக்கு உடல் நலப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இவ்விசயத்தில் உரிய வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்ற வேண்டுமென்று   கேட்டுக் கொ்ள்கிறோம்.

click me!