
செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி பணம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,கரூரில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, கரூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றி மலை, ராம் நகர் உள்ளிட்ட 10 இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் வருமான வரித்துறையினர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரில், செந்தி பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு அடுத்தக்கட்டமாக நேரடியாக செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது