ஜெயலலிதாவின் கடிதங்களையும் விட்டு வைக்காத வருமான வரித்துறை அதிகாரிகள் !! அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !!!

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 07:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஜெயலலிதாவின் கடிதங்களையும் விட்டு வைக்காத வருமான வரித்துறை அதிகாரிகள் !! அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !!!

சுருக்கம்

income tax raid poes garden

சென்னை போயஸ் தோட்டம் வேதா இல்லத்தில்  நடைபெற்ற வருமான வரித்துஐற சோதனையின் போது ஜெயலலிதாவின் பல முக்கிய கடிதங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ள நிகழ்வு தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கடந்த  9 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு  வருமான வரித்துறையினர் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் ஒரு மெகா ரெய்டை நடத்தி முடித்திருந்தனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புப்ப சொத்து ஆவணங்கள், நகைகள், வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ரெய்டின் உச்சகட்டமாக நேற்றிரவு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்திற்குள்ளேயே வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.

நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான இளவரசியின் மகள் ஷகிலா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரை அழைத்துக் கொண்டு போய்ஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைந்த அதிகாரிகள் தங்கள் அதிரடியைத் தொடங்கினர்.

முதலில் பூங்குன்றன் அறையை சோதனையிட்ட அதிகாரிகள் பின்னர் சசிகலாவின் அறையையும் சல்லடை போட்டு தேடத் தொடங்கினர். அங்கிருந்த லேப்டாப், பென் டிரைவ் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். அது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவிற்கு வந்த சில கடிதங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறையினரின் இந்த செயல்களால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!