
சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்குள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயா தொலைக்காட்சி, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகம், நமது எம்.ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம், கோடநாடு எஸ்டேட், ஜாஸ் சினிமாஸ், விவேக் வீடு மற்றும் அலுவலகம், மன்னார்குடி திவாகரன் வீடு, அவரது உதவியாளர்கள் வீடு, தஞ்சாவூர் டாக்டர் வெங்கடேஷ் வீடு, நடராஜன் வீடு என சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் உட்பட 160 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வீட்டிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருக்னறனர்.
இன்று அதிகாலை முதல் பல இடங்களில் சோதனைகள் நடைபெற்று வந்தாலும் காலை 9 மணிக்குத்தான் அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் வந்து சேர்ந்தனர்.
அவ்ர்களுடன் 10 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வந்தனர். உடனடியாக வீட்டக்குள் நுழைந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், டி.டி.வி.தினகரனிடம் பேசிவிட்டு உடனடியாக தங்கள் ஆய்வைத் தொடங்கினர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்தததையடுத்த அங்கு திரண்ட டி.டி.வி.ஆதரவாளர்கள் மத்திய அரசு, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து சசிகல தொடர்பான 160 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.