ஐ.டி. ரெய்டில் நாமக்கல் செந்திலும் சிக்கினார் !! சசிகலாவின் வலது கரமாக இருந்தவர் !!!

 
Published : Nov 09, 2017, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
ஐ.டி. ரெய்டில் நாமக்கல் செந்திலும் சிக்கினார் !! சசிகலாவின் வலது கரமாக இருந்தவர் !!!

சுருக்கம்

income tax raid in sasi pro lawyers

ஜெயா தொலைக்காட்சி, டி.டி.வி.தினகரன் இல்லம் மற்றும் சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர்கள்  வீட்டிகளிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தஞ்சை, புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, மன்னார்குடி, பெங்களூரு என 160க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்து வருகிறது.

இந்நிலையில் நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞரான செந்தில் வீட்டிலும் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது. வழக்கறிஞர் செந்தில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானவர். மேலும் இவர் சசிகலாவின் வலது கரமாக இருந்து செயல்பட்டவர்.

இதே போல் சசிகலா ஆதரவு வழக்கறிஞர்கள் புதுக்கோட்டை பரணி கார்த்திகேயன், சென்னை வேலு கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!