
டி.டி.வி. தினகரனுக்கு சொந்தமான, புதுச்சேரி ஏரோவில் அருகே உள்ள பண்ணை வீட்டில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வருகின்றனர்.
சென்னை, அடையாறில் உள்ள வீடு, மன்னார்குடியில் உள்ள வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி, ஏரோவில் அருகே உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம், கொத்தமங்கலத்தில் உள்ள காகித ஆலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது
ஜெயா தொலைக்காட்சி, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம், கோடநாடு எஸ்டேட் ஜஸ் சினிமாஸ், விவேக் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 160 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறையினரின் இந்த சோதனை இன்று மாலை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.