போயஸ் கார்டனையும் விட்டுவைக்காத வருமான வரித்துறை..! ஜெயலலிதா வீட்டிலும் அதிரடி சோதனை..!

 
Published : Nov 09, 2017, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
போயஸ் கார்டனையும் விட்டுவைக்காத வருமான வரித்துறை..! ஜெயலலிதா வீட்டிலும் அதிரடி சோதனை..!

சுருக்கம்

income tax raid in jayalalitha poes garden

தினகரன், திவாகரன் உட்பட சசிகலாவின் உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், கோடநாடு பங்களா உட்பட 160 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்திவருகிறது.

போலி நிறுவனங்கள் தொடங்கி நஷ்ட கணக்கு காட்டி ஏமாற்றியதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், தமிழகம், கர்நாடகா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டையும் வருமான வரித்துறையினர் விட்டுவைக்கவில்லை. ஜெயா டிவியின் பழைய அலுவலகம் இயங்கிவந்த போயஸ் கார்டனிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் சசிகலா தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்படும் இந்த அதிரடி சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!