
39 மணி நேரமாக நடைபெற்ற சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் வடவள்ளி சந்திரசேகர், அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளராக இருந்து வருகிறார். கே சி பி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரசேகர் அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் மாநகராட்சி பணிகள், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட டெண்டர்களை அதிக அளவில் எடுத்துள்ளார். இதில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இரண்டு முறை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் சந்திரசேகர் வீட்டில் சோதனை நடைபெற்றது.
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடல்...!
மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல்.. பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!
ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்
இந்த நிலையில் வடவள்ளி சந்திரசேகரின் வீடு , அவரது தந்தை வீடு, நண்பர் பிரபு வீடு, ஆலயம் அறக்கட்டளை, கே சி பி பொறியியற் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனை நடத்தியிருக்தினர். நேற்று முந்தினம் நன்பகல் 12.10 மணிக்கு ஆரம்பமான சோதனையானது நேற்று அதிகாலை முடிவடைந்துள்ளது. வடவள்ளி சந்திர சேகர் வீடு , தந்தை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், ஐ டி அதிகாரிகள் சந்திரசேகர் அலுவலகத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பென் டிரைவ், ஹார்ட் டிஸ்ட் , மடிக்கணினி, கணினி, வங்கி பரிவர்தனை கணக்குகள் , கட்டுமான பணி ஆவணங்களை உள்ளிட்ட ஆவணங்களை சுமார் 39 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து இன்று அதிகாலை சோதனையை முடித்த வருமான வரித்துறை அதிகாரிகள். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்