மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல்.. பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!

Published : Jul 08, 2022, 08:45 AM IST
மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல்.. பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!

சுருக்கம்

சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமையல் எரிவாயு விலை உயர்வு

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது, இதன் காரணமாக நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஆண்டில் 8 வது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்க்கு பல்வேறு தர்ப்பினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை பாஜக மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஓராண்டில் எட்டாவது முறையாக விலையை உயர்த்தி, தற்போது 14.2 கிலோ எடையுள்ள ஒரு எரிவாயு உருளை, நுகர்வோர் ரூ.1068 (ஒரு ஆயிரத்து அறுபத்தெட்டு) கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - அண்ணாமலை

தனியார் நிறுவனங்கள் லாபம்

மத்திய அரசின் அதிகாரத்துக்கு வரும் நேரத்தில், ''அச்சே தின் ஆனே வாலே'' (இனி நல்ல நாட்கள் வருகின்றன) என மோடி உறுதியளித்தார். ஆனால், எட்டாண்டு காலத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் நான்கு கோடி சமையல் எரிவாயு நுகர்வோர், மறு உருளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மறுபக்கம் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் தொகை லாபம் அடைந்து வருகின்றன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பெற்று, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறி வருகின்றன எற கூறியுள்ளார். ஆனால் மாத ஊதியப் பிரிவினர் முதல் தினக்கூலி தொழிலாளர் வரை கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

டெங்கு - சிக்குன்குனியாவை தடுக்கும் புதிய கொசு...! புதுச்சேரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தல்

விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவல், அதன் உருமாறி அலை, அலையாக நோய்த்தொற்று பரவும் சூழலில், வேலையிழப்பு மற்றும் வருமான இழப்பும் தொடர்கின்ற நிலையில் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது, மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்டைக்கு மக்கள் நலனை பலியிட்டு வரும் பாஜக மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உயர்த்தப்பட்ட விலையை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16, டீசல் ரூ.18..! தயார் நிலையில் 40 ஆயிரம் லிட்டர்..? மீண்டும் வந்த ராமர் பிள்ளை
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!