அதிகாலையிலேயே காமராஜ் வீட்டில் திபுதிபுவென நுழைந்த விஜிலன்ஸ்.. FIRல் உள்ள விவரங்கள் என்ன? பரபரப்பு தகவல்.!

By vinoth kumar  |  First Published Jul 8, 2022, 8:03 AM IST

அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவாருர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யயப்பட்டது. மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- 2 மணி நேரம் காரசார வாதம்.. ஹை கோர்ட்டையே அலறவிட்ட ஓபிஎஸ் தரப்பு.. அரண்டு மிரண்டு போன இபிஎஸ் தரப்பு..!

இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாருர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், Dr.M.K.இனியன்,  Dr.K. இன்பன், R.சந்திரசேகரன், B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க; முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

இந்த வழக்கினை தொடர்ந்து, சென்னை, கோயம்புத்துார், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகம் ஆகியோர் இடங்களில் லஞ்ச ஒழித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;- இதுவும் போச்சா.. அடுத்தடுத்து எடப்பாடியாருக்கு சாதகமான தீர்ப்பு .. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

click me!