அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழித்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காமராஜ், அவரது மகன்கள் இனியன், அன்பன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் வடக்கு வீதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சார் காமராஜ் வீட்டில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- 2 மணி நேரம் காரசார வாதம்.. ஹை கோர்ட்டையே அலறவிட்ட ஓபிஎஸ் தரப்பு.. அரண்டு மிரண்டு போன இபிஎஸ் தரப்பு..!
அதேபோல், சென்னையில் காமராஜ் தொடர்புடைய 6 இடங்களிலும், காமராஜின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 49 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.