190 மட்டும் இல்ல... அதுக்கு மேல திட்டம் இருந்துருக்கு... ’பட்’ அதிகாரிகள் இல்லையாம்...?

 
Published : Nov 09, 2017, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
190 மட்டும் இல்ல... அதுக்கு மேல திட்டம் இருந்துருக்கு... ’பட்’ அதிகாரிகள் இல்லையாம்...?

சுருக்கம்

Income Tax officials are conducting a raid at 190 locations including Sasikala DTV Dinakaran and their relatives.

சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆனால் 190 இடங்களைத் தவிர மேலும் பல இடத்தில சோதனை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் போதிய அதிகாரிகளை திரட்ட இயலாததால் பல இடங்களில் சோதனை நடத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சசிகலாவுக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் உறவினர்கள் அனைவரது வீடுகளும் சோதனைக்கு ஆளாகியுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள டிடிவி பண்ணை வீடு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் ஜெயராமன் வீடு, தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, தாம்பரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை,  தஞ்சாவூர் நடராஜன் வீடு, மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, நீடாமங்கலம் அருகே உள்ள திவாகரன் பண்ணை வீடு, செங்கமலத்தாயார் கல்லூரி ஊழியர் அன்பு ஜானகிராமன் வீடு, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி, ஜாஸ் சினிமா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  

சசிகலா உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தும் முடிவு செப்டம்பரிலேயே எடுக்கப்பட்டது என தெரிகிறது. 

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 1800 பேர், 187 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 190 இடங்களைத் தவிர மேலும் பல இடத்தில சோதனை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் போதிய அதிகாரிகளை திரட்ட இயலாததால் பல இடங்களில் சோதனை நடத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!