ரஜினி கொடுத்த ஒற்றைக் கடிதம்...!! அலறியடித்து ஒட்டுமொத்த வழக்கையும் வாபஸ் வாங்கிய வருமான வரித்துறை...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 30, 2020, 12:31 PM IST
Highlights

தேபோல் ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் குறித்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்தது .   அதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது .   

நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்தேன் அவர்கள் எனக்கு அதற்கு வட்டி கொடுத்தார்கள் நான் இதை ஒரு தொழிலாக செய்யாததால் இந்த வட்டிக்கு நான் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார் .  இதனால் அவர் மீதான வருமான வரி ஏய்ப்பு  வழுக்கை வருமானவரித்துறை வாபஸ் பெற்றுள்ளது . 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இயங்குவதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரம் காட்டி வந்தார் நடிகர் ரஜினிகாந்த்.   இப்போது முழுவதுமாக அரசியலில் குதிக்க தயாராகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்  அந்த அளவிற்கு  அவரின் வார்த்தைகள் அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் வினையாற்ற வைக்கிறது.  சமீபத்தில் அவர் தந்தை பெரியார் குறித்து தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த ரஜினி மீதான  வரி  எய்ப்பு புகாரை வருமானவரித்துறை  திடீரென வாபஸ் பெற்றுள்ளது ,  இது மேலும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005 வரை  சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டவில்லை என்பது அவர் மீதான புகார் .  இதனால் அவருக்கு வருமானவரித் துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது அதில் 2002- 2003 நிதியாண்டில் ரஜினிக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது .  இதேபோல் 2003 மற்றும் 2004 ஆண்டில் 5 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இந்த அபராதத் தொகையை செலுத்தவில்லை அதேபோல் 2004 2005 ஆம் ஆண்டில் 54 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது . ஆனால் அவர் எந்த அபராதத்தையும் செலுத்தவில்லை . 

 இதனால் நடிகர் ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமானவரித்துறை அவர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது கடந்த ஆறு ஆண்டுகளாக  இந்த வரி ஏய்ப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இதற்கான வழக்கு விசாரணைக்கு வந்தது .  அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகர் ரஜினிகாந்த் மீது இருப்பது ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத் தொகை என்பதால் அதற்கு  புதிதாக வழக்கு தொடர்வது வருமான வரித்துறைக்கு  வழக்கமில்லை எனவே அதை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார் .   அதேபோல் ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் குறித்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்தது .   அதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது . 

  

அதாவது வருமான  வரித்துறையில் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவின் விவரம் :-  இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பணத்திற்கு முறையாக வரி செலுத்தி வருகிறேன் ஆனால் இது நான் கடன் கொடுத்த தொகை அதேபோல் யாருடனும்  கடன் கொடுப்பதை நான்  தொழிலாக செய்து வரவில்லை ,  ஆனால் நான் கொடுத்த கடனுக்கு வட்டி கிடைத்தது .  2002 2003 ஆம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தேன் .  அதற்கு 1.45 லட்சம் வட்டி கிடைத்தது அதேபோல் கடந்த 2003- 2004 ஆம் நிதியாண்டில்  முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாயும் ,  பிரிட்ஜூன் லால் ,  சசி பூஷன்,  சோனு பிரசாத் ஆகியோருக்கு 68 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தேன் அதில் பலர் எனக்கு கடனை திருப்பிச் செலுத்தவில்லை ,  ஆனால் எனக்கு 33 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது .  வட்டி கொடுப்பதை நான் தொழிலாக செய்யாததால் அதற்கு நான் வரி செலுத்த தேவையில்லை என விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!