ரஜினி உயிருக்கு ஆபத்து...!! பகீர் கிளப்பும் உளத்துறை ரிப்போர்ட் ... விரைவில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...??

Published : Jan 30, 2020, 11:44 AM IST
ரஜினி உயிருக்கு ஆபத்து...!! பகீர் கிளப்பும் உளத்துறை ரிப்போர்ட் ... விரைவில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...??

சுருக்கம்

நடிகர்  ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் தமிழ்நாட்டில் தலை காட்டவே முடியாது ,  உயிருடன் உலவ முடியாது என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர் .

நடிகர் ரஜினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ,  எனவே அவருக்கு  பாதுகாப்பு வழங்க  வேண்டியது அவசியம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ,  நடிகர் ரஜினிகாந்த்  வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன . சென்னையில் நடந்த துக்ளக்  ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் ,  கடந்த 2071 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து கடவுள்களான ராமர் சீதை உருவப்படம் அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

அதேபோல் ,  கையில் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுக காரர் என்றும்  துக்ளக் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளிகள் என்றும் அவர் பேசியது திமுக மற்றும்  பெரியாரிஸ்டுகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .  இந்நிலையில்  துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக தகவல் வெளியானது  .  அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி பெரியாரிய இயக்கங்களும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர் .  அப்போது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு  அவர்கள் கைது செய்யப்பட்டனர்.   அப்போது பேட்டி கொடுத்த அவர்கள் ,  நடிகர்  ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் தமிழ்நாட்டில் தலை காட்டவே முடியாது ,  உயிருடன் உலவ முடியாது என மிரட்டல் விடுக்கும்  வகையில் பேசினர் . 

ஆகவே  ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது ,  எனவே அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தில் புகார் அளித்தனர் .  இந்நிலையில் மத்திய உளவுத்துறை மற்றும்  உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய தகவல் அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன அதில் ரஜினியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்  , ஆகவே  அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிலுஃ வலியுறுத்தப்பட்டுள்ளதாக  தெரிகிறது .   எனவே விரைவில் ரஜினிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு  அல்லது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!