அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது புயல்.. குலாப் என பெயரிட்டது பாகிஸ்தான். என்ன நடக்கபோகுதோ.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2021, 10:03 AM IST
Highlights

இது தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை கோலாப்பூர் விசாகப்பட்டினம் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகே கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது பருவமழை எதிர்கொள்ள மாநில முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடந்த நிலையில்  நேற்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நேற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தற்போது அது தொடர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கோலாப்பூருக்கு 510 கிலோமீட்டர் தொலைவிலும், கலிங்கபட்டினத்திற்கு 590 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. 

இது தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை கோலாப்பூர் விசாகப்பட்டினம் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகே கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் பரிந்துரைக்கப்பட்ட குலாப் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயலால் அதிக சேதாரங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், கடலோர மாவட்டங்களில் குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், உள் மாநிலங்களிலும் இதன் தாக்கம் காரணமாக அதிக அளவில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!