அடிதூள்.. தமிழக காவல் துறையில் இப்படி ஒரு மாற்றமா.. தட்டி தூக்கும் ஸ்டாலின் அரசு.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2021, 8:56 AM IST
Highlights


தமிழகத்தில்  5 ஏடிஜிபிக்களை டிஜிபியாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் டிஜிபி களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த உத்தரவை உள்துறைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில்  5 ஏடிஜிபிக்களை டிஜிபியாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் டிஜிபி களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த உத்தரவை உள்துறைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், காவல்துறை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக நேற்று இரவு தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில், குற்றப்பின்னணி உள்ள 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல காவல்துறை உயர் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தும் உத்தரவுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் 5 ஏடிஜிபி களை டிஜிபியாக அந்தஸ்துக்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார். அதில் 1990ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளாக தமிழகத்தில் பணியாற்றும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 5 அதிகாரிகளை டிஜிபியாக உயர்த்தி பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய கழகத்தின் தலைவரும், கூடுதல் டிஜிபியாக உள்ள ஏ.கே விசுவநாதன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார், அயல் பணியில் உள்ள ரவிச்சந்திரன் ஆகிய ஐந்து ஏடிஜிபி களுக்கு டிஜிபியாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஏழு டிஜிபிக்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது 5 ஏடிஜிபிக்கள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றிருப்பதன் மூலம் தமிழகத்தின் டிஜிபிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் டிஜிபி அந்தஸ்து உயர்வு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன நிலையில் காவல் உயர் அதிகாரிகளின் முக்கிய பணியிடங்கள் மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!