குரங்கு கையில் உள்ள பூமாலையை மீட்டெடுப்போம்... - கர்ஜிக்கும் டிடிவி தினகரன்...!

 
Published : Nov 23, 2017, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
குரங்கு கையில் உள்ள பூமாலையை மீட்டெடுப்போம்... - கர்ஜிக்கும் டிடிவி தினகரன்...!

சுருக்கம்

In the monkeys hand the bamboo is bumped between two sides

குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல் எடப்பாடி பன்னீர் தரப்பினரிடையே இரட்டை இலை சிக்கியுள்ளது எனவும் அதை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டப்படி மீட்டெடுப்போம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. காரணம் அதிமுக இரு அணியாக பிரிந்தது. 12 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பன்னீர் அணி நாங்களே உண்மையான அதிமுக என்ற குரலோசையை எழுப்பியது. 

இதனால் குழம்பிய எலெக்‌ஷன் கமிஷன் யாருக்கும் இலை இல்லை என முடிவெடுத்தது. இதனிடையே ஆட்சி பயத்திலும் அதிகார பயத்திலும் திண்டாடிக்கொண்டிருந்த எடப்பாடி தந்திரத்தை கையில் எடுத்தார். 

அதாவது தன்னோடு ஒத்துழைக்காத டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சை சமாதானத்திற்கு அழைத்தார். அவர் அழைத்த அழைப்பு தற்போது வீண்போகவில்லை. இரட்டை இலை சின்னம் மீண்டும் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு கிடைத்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவே இல்லை என்று தெரிந்திருந்தும் சின்னத்தை முடக்க காரணம் என்ன எனவும் இப்பொது அடிப்படை உறுப்பினர்களின் எண்ணிக்கையை புறந்தள்ளி விட்டு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது எனவும் தெரிவித்தார். 

மத்திய அரசுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாக தீர்ப்பளித்துள்ளது எனவும் சட்ட ரீதியாக போராடுவோம் எனவும் குறிப்பிட்டார். 

99 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் எனவும் குரங்கு கையில் பூமாலை போன்று இருக்கும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் எனவும் டிடிவி தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்