
இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது, முதல்வர் மற்றும் துணை முதல்வர்களின் முயற்சியால்தான் என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இன்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிமுக என்ற கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி அணி பயன்படுத்தலாம் என்றும் மதுசூதனன் அணி இவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீண்டும் விடுவிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த வெற்றிக்கு இரண்டு அண்ணண்கள்தான் காரணம் என்று கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான முயற்சிதான் இந்த வெற்றிக்கு காரணம் என்றார்.
மேலும் பேசிய கோகுல இந்திரா, ஒவ்வொரு அதிமுகவினரின் கனவும், கட்சி, சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே. அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.