தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான்…. அடித்துச் சொல்லும் காதர் மொய்தீன் ….

 
Published : Jun 04, 2017, 07:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான்…. அடித்துச் சொல்லும் காதர் மொய்தீன் ….

சுருக்கம்

In tamil nadu next DMK rule...Kadar moideen speech

சமூக நீதியை காத்த மாபெரும் தலைவர் கலைஞர்  கருணாநிதி என்றும் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக பணியாற்றுவர் என்றும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

திமுக  தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில், ராகுல் காந்தி உட்பட பல வட இந்திய தலைவர்கள் பங்கேற்று கருணாநிதிளை வாழ்த்திப் பேசினர். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கருணாநிதியை வெகுவாகப் பாராட்டி பேசினார்.


அப்போது தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை நிலைநிறுத்திய திமுக தலைவர் கருணாநிதிக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது தி.மு.க. தான் என்றும் அவர் கூறினார்.சமூக நீதியை காத்த மாபெரும் தலைவர் கலைஞர் என்றும் அவர்   மீண்டும் தமிழக முதலமைச்சராக முதல்வராக பணியாற்றுவர் என்றும் தெரிவித்தார்.

இந்த நூற்றாண்டில் நிகரற்ற தலைவராக உள்ளவர் கருணாநிதி என்றும் காதர் மொய்தீன் பாராட்டுத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்