''இன்னொரு சுதந்திர போருக்கு மக்கள் தயாராகி விட்டார்கள்'' - மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்

 
Published : Jun 03, 2017, 10:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
''இன்னொரு சுதந்திர போருக்கு மக்கள் தயாராகி விட்டார்கள்'' - மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்

சுருக்கம்

Stalin Speech aganst Central Govt at Karunanidhi function

இந்தியாவை மதசார்பு நாடாக மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சி செய்தவதாக குற்றம்சாட்டிய  தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் மற்றுமொரு சுதந்திர போராட்டத்துக்கு தயாராகி விட்டார்கள் என தெரிவித்தார்.

திமுக  தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டசபைப் பேரவை வைர விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், கருணாநிதிக்கு  பெருமை சேர்க்கும் வகையில்  இந்தியா முழுவதுமிருந்து தலைவர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு சிலர் இந்த விழாவை நடத்திட வேண்டும் என்று முடிவெடுத்து யாரையெல்லாம் அழைப்பது என்று திட்டமிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிலர் தங்களையும் தலைவர்கள் என்று காட்டிக்கொண்டு திரிந்த அனாதை தலைவர்கள் கேலி செய்தார்கள், கிண்டல் செய்தார்கள் கூட்டணிக்கு அச்சாரம் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி அவர்களுக்கு விளம்பரம் தேடித்தரவிரும்பவில்லை என்றார்.

திமுக தலைவராக 48 ஆண்டுகாலம் தலைவராக இருந்து வழி நடத்திக்கொண்டிருக்கிறார். 19 ஆண்டுகாலம் முதலமைச்சராக  இருந்து சாதனை படைத்துள்ளார்.1957 அண்ணா அவர்கள் குளித்தலைக்கு செல் என்று கட்டளையிட்டார்.சென்றார். வென்றார்.

டெல்லியில் பிரதமரை பார்க்க சென்றேன். அப்போது பிரதமரிடம் என்னை அறிமுகப்படுத்தி முதல்வர் கருணாநிதி யின் மகன் என்றார்கள். அப்போது வி.பி.சிங்,  இவரை எனக்கு தெரியாதா அன்று பேரணியில் தலைமை தாங்கி வந்த இளைஞர் அல்லவா என்றார்.

இந்த கூட்டத்திற்கு எப்படியாவது கருணாநிதியை அழைத்து வந்து விடலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என கலைஞர் வராததற்கு காரணம் தெரிவித்தார்.

இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த்த இயக்கம் திமுக , மதச்சார்பின்மை , சமூக நலம் , விவசாய தொழிலாளர் உரிமை காக்கும் இயக்கம் திமுக அப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவருடைய விழா இங்கு நடக்கிறது இந்த கூட்டத்தின் நாயகன் இங்கில்லை என்ற வருத்தம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்திரா , விபி சிங் , குஜ்ரால் ,வாஜ்பாய் , மன்மோகன் போன்றவர்களை பிரதமராக்க உதவியுள்ளார் கருணாநிதி. எத்தனை பிரதமர்களை உருவாக்கி உள்ளார் கலைஞர். ஏன் ஜனாதிபதி தேர்தலில் அவரது பங்கு இருந்துள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற காரணத்தால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இந்தியாவை மதம் சார்ந்த நாடாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. . அதற்கான வேலையை செய்துகொண்டு வருகின்றனர். தற்போது மூன்றாண்டு தோல்வியை மறைக்க திசை திருப்ப மாட்டிறைச்சுக்கு தடை இந்த நிலையில் தான் நாடு உள்ளது. பிஜேபியை தடுத்து நிறுத்தி இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டி உள்ளது. இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டி உள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கருணாநிதியின் உடல் நிலை சரியாக இருந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருப்பார். இன்னொரு சுதந்திர போராட்டத்தை சந்திக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.. 
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்