
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு 4வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நாட்டின், 69வது குடியரசு தினம், இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், தென் கிழக்காசிய கூட்டமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர் களாக பங்கேற்கின்றனர்.
உள்நாட்டு பிரமுகர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளும், இதில் பங்கேற்கின்றனர்.
இந்தவிழாவில், எதிர்க்கட்சி தலைவர் என்றமுறையில், மூன்று ஆண்டுகளாக, சோனியாவுக்கு, முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, காங்திரஸ், தலைவர், ராகுலுக்கு, நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. தலைவர், அமித்ஷாவுக்கு, முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், ராகுலுக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் 4வது வரிசையில் அமர்வதில் ராகுல் காந்திக்கு பிரச்னை ஏதும் இல்லை என்றும், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பாஜக மலிவான அரசியல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.