பாஜகவுக்கு எதிராக ஆவேசமாக களம் இறங்கும் திமுக; கோவையில் கண்டன பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

Published : Jun 16, 2023, 01:17 PM ISTUpdated : Jun 16, 2023, 01:19 PM IST
பாஜகவுக்கு எதிராக ஆவேசமாக களம் இறங்கும் திமுக; கோவையில் கண்டன பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

சுருக்கம்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கோவையில் இன்று மாலை திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும், ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்தும் இன்று  திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கு பெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில்,  கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டன உரையாற்ற உள்ளனர். திமுக பொருளாளரும், எம் பியுமான,  டி ஆர் பாலு இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கேஎம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்எச் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

MDMK Vaiko Condemns: “நீங்கள் முதல்வரல்ல ஆளுநரே” மத்திய அரசின் பணியாளர் மட்டும் தான் - வைகோ ஆவேசம்

பாசிச பாஜக அரசை கண்டித்து இன்று நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரள உள்ளனர். இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கண்டன உரையாற்ற உள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!