இது என்ன ஆச்சரியம் !! வாங்கிய லஞ்சப்பணத்தை வீட்டுக்கு வந்தே திருப்பிக் கொடுக்கும் அதிகாரிகள் !!

First Published Dec 28, 2017, 6:53 AM IST
Highlights
In andrapradesh officers gave back the bribe money


படிப்பு, நிலம் சார்ந்த சான்றிதழ்கள் வாங்க, வேலை வாய்ப்பு பெற போன்றவற்றுக்காக அரசு அதிகாரிகளுக்கு பொது மக்கள் கொடுத்த லஞ்சப்பணத்தை அதைக் பெற்ற அதிகாரிகளே  வீடு தேடி வந்து திரும்பக் கொடுத்து வரும் அதிசய சம்பவங்கள் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறிவருகின்றன.

அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களில் தங்களது வேலை உடனடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றுக்காகவும் லஞ்சம் அளிக்கப்படுவது நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ளது. லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்காடல் ஏமாந்துபோனவர்களும் உள்ளனர்.



அந்த வகையில்  அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடிப்போன மாநிலமாக கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் இரண்டாமிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய மோசமான சூழ்நிலையை மாற்றும் வகையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய திடடம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

அதன்படி அரசு பணியாளர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுத்து இருந்தால் 1100 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும்,  அந்தப் பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும் கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

அதே நேரத்தில் புகார் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால் இந்த உதவி மையத்தில் புகார்கள் குவிய தொடங்கின. இதையடுத்து, புகார் அளிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முதல் கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



இந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்பவர்கள் மேல் நடவடிக்கைக்கு பயந்து, யாரிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கினார்களோ, அவர்களின் வீடுதேடி சென்று பணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த ஆறு மாதங்களில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்ககள் லஞ்சமாக கொடுத்த  லட்சக்கணக்கான ரூபாய் திரும்பி கொடுக்கப்பட்டுவிட்டதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!