இன்னும் சற்று நேரத்தில் பிரிவு உபச்சார விழா... நாளையுடன் ஓய்வு பெறுகிறார் நீதிபதி என். கிருபாகரன்..!

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2021, 3:32 PM IST
Highlights

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனையில் (பேக்கிங் செய்யாமல்) விற்பனை செய்ய இடைக்கால தடை.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து, அவருக்கு இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், கடந்த 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து, 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், மத்திய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

இதையடுத்து கிருபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார். இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி 62 வயது பூர்த்தியாவதையொட்டி நாளை ஓய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. 


பிராங் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை. டிக்டாக் செயலிக்கு தடை. ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை. சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனையில் (பேக்கிங் செய்யாமல்) விற்பனை செய்ய இடைக்கால தடை.

1 முதல் 10 ஆம் வகுப்பு 11,12ஆம் வகுப்பு மற்றும் பட்டம் அல்லது பட்டயம் போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 % இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவு. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரண்டு குழுக்கள் அமைத்து, கோவில் நிலங்கள் தொடர்பான சொத்துக்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு. அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய அனைத்து ரயில் நிலையங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டமுக்கிய உத்தரவுகளை பிறப்பித்தவர் நீதிபதி கிருபாகரன்.

click me!