ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு. 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிக்க தேவையில்லை.

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2021, 10:05 AM IST
Highlights

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதில் இருந்து தற்காலிக விலக்கு அளித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதில் இருந்து தற்காலிக விலக்கு அளித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழ், வேலை இல்லாதற்கான சான்றிதழ், திருமணம் அல்லது மறுமணம் செய்ததற்கான சான்றிதழை அந்தந்த மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம்ஒப்படைக்க வேண்டும்.  

ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஓய்வூதியதாரர்கள் உடல் நலன் கருதி 2020-ம் ஆண்டிற்கான சான்றிதழ் அளிப்பதில் இருந்து விலக்களித்து மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் இந்த சூழலில், ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதில் இருந்து தற்காலிக விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ் அளிக்க யாரும் அலுவலகம் வர வேண்டாம் எனவும் மாநகராட்சி சார்பில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அதிகம் பாதிக்க கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருப்பதால் அவர்களின் நலனை அரசு கருத்தில் கொண்டு விலக்களித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 

click me!