அடி தூள்... தமிழக அரசு அதிரடி மேல் அதிரடி.. இன்று முதல் இரண்டு வேளைகளிலும் நியாயவிலை கடைகள் இயங்கும்.

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2021, 9:39 AM IST
Highlights

அந்த வகையில்,  தமிழகம் முழுவதும் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் இன்று முதல் நியாய விலைக் கடைகளுக்கான நேரம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவி வரும் சூழலில், கொரோனா நிவாரணம் மற்றும் மாதாந்திர பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஏதுவாக நியாயவிலைக் கடைகள் காலை 8மணி முதல் 12 மணி வரை செயல்பட்டு வந்தது. 

அந்த வகையில்,  தமிழகம் முழுவதும் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9மணி முதல் 12:30மணி வரையிலும், பிற்பகல் 2மணி முதல் 5 மணி வரையிலும் நியாயவிலைக்கடைகள் செயல்படும் எனவும், மறு உத்தரவு வரும் வரையில் இந்த வேலை நேரம் அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 பொருட்கள் தொகுப்பு வரும் ஜூன் 15ம் தேதி முதல் விநியோகம் செய்ய ஏதுவாக, ஜூன் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை பணியாளர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று   பிற்பகலில் டோக்கன் வழங்க வேண்டும் எனவும், முற்பகல் வழக்கம் போல் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!