காவல் துறை அதிகாரிகளை மரியாதை குறைவாக பேசினால் கடும் நடவடிக்கை.. சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2021, 9:52 AM IST
Highlights

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான தகவலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்றி தெரிவித்தார். 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான தகவலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்றி தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் ஆணையர்  சங்கர் ஜிவால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலாக்க பணிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வாகன தணிக்கை பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரடங்கு பொறுத்தவரை  இன்றுமுதல் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர்  சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.  இன்று போக்குவரத்து அதிகமாகி விட்டது. அதனை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

 ஊராடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் இ-பதிவு பெற்று அத்தியாவசிய பணிகளுக்காக சென்று வருகின்றனர். ஆகையாலே போக்குவரத்தும் அதிகரித்துள்ளது, ஆகவே செவ்வாய் கிழமை (இன்று) முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறை படுத்தப்படும் என்றார். மேலும் பேசிய அவர் ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்களுக்கு எந்த விதமான சோதனைகளுமின்றி உரிய நேரத்தில் அனுப்பப்பட்டு வருகிறது, சேத்துப்பட்டு சிக்னலில் நடைபெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மேலும் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  

click me!