“சட்டவிரோத பண பரிமாற்றம்…?” - காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கப்பிரிவு அதிரடி ரெய்டு

Asianet News Tamil  
Published : Jun 01, 2017, 01:10 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
“சட்டவிரோத பண பரிமாற்றம்…?” - காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கப்பிரிவு அதிரடி ரெய்டு

சுருக்கம்

Illegal Cash Transfer Congress Leaders Enforcement Action Raid in Homes

மும்பையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக காங்கிரதஸ், தலைவர் பாபா சித்திக் உள்பட பல தலைவர்கள் வீடுகளில் அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பதவி வகித்து வருகிறார். இந்த மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில், குடிசைப் பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குடிசைப் பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவதற்காக போலி நிறுவனங்கள் துவக்கப்பட்டு, அவற்றின் மூலம் நிதி முறைகேடுகள் நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதையொட்டி மும்பையை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக், மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது, குடிசைப் பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளுக்காக, போலி நிறுவனங்களை துவக்கி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சித்திக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?