அமைச்சராக பதவியேற்ற உதயநிதி.! வாழ்த்து சொல்வது போல் மறைமுகமாக விமர்சித்தாரா இளையராஜா..?

Published : Dec 15, 2022, 03:59 PM IST
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி.! வாழ்த்து சொல்வது போல் மறைமுகமாக விமர்சித்தாரா இளையராஜா..?

சுருக்கம்

அமைச்சராக பதவியேற்பதால் உங்கள் பொறுப்பு அதிகமாகிறது. இந்த பொறுப்பை நீங்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும் என தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

அமைச்சர் உதயநிதி- திரைபிரபலங்கள் வாழ்த்து

திமுக அரசு பதவியேற்று 20 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யப்பட்டு, துறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 1 வருடத்திற்கு முன்பே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கான வாய்ப்பு தற்போது தான் உருவாகியுள்ளது. நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா அவரது குரலில் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். 

பொறுப்பு அதிகமாகிறது.

அதில்,  மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் பதவியேற்கும் இந்நாளில் நான் வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. முக்கியமாக நான் சொல்ல விரும்புவது, ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என வள்ளுவர் சொன்னதைப் போல உங்கள் அம்மாவுக்கு தான் நீங்கள் பதவியேற்பது மிகவும் சந்தோஷமாக இருக்கும். இதனை வள்ளுவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். இது நிஜமாக நடக்கும்போது உங்கள் அம்மாவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என நான் எண்ணிப் பார்க்கிறேன். நானும் மகிழ்கிறேன். நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். ஆனால் அமைச்சராக பதவியேற்பதால் உங்கள் பொறுப்பு அதிகமாகிறது. இந்த பொறுப்பை நீங்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும். மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். இதனை நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்'' என இளையராஜா தனது குரலில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை இருளில் மூழ்கடித்து விட்டு தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டு விழா..! ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

விமர்சித்தாரா இளையராஜா

பாஜக அரசு சார்பாக மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளையராஜா உதயநிதியை வாழ்த்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா வாழ்த்துவது போல் அமைச்சராக உதயநிதி பதவியேற்றதை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என அவரது தாயார் துர்கா ஸ்டாலின் தான் தொடர்ந்து நெருக்ககடி கொடுத்த வந்த நிலையில் தான் கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டத்தால் 15 நாட்களில் 5 வது உயிரிழப்பு.! ஆளுநர் ஒப்புதல் தராதது சரியில்லை.! அன்புமணி ஆவேசம்

இதனையடுத்து தான்  திடீரென அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை விமர்சிக்கும் வகையில் தான் இளையராஜா தனது வாழ்த்து பதிவில், உங்கள் அம்மாவுக்கு தான் நீங்கள் பதவியேற்பது மிகவும் சந்தோஷமாக இருக்கும். இதனை வள்ளுவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். இது நிஜமாக நடக்கும்போது உங்கள் அம்மாவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என நான் எண்ணிப் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

பிளாக் ஷீப் சேனலில் மர்ம மரணம்.! தமிழகத்தில் தொடரும் கொலைகள்.!கனவு உலகில் மணல் கோட்டை கட்டும் ஸ்டாலின்- இபிஎஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!