
மாநிலங்களவை உறுப்பினராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை தலைவர் அறையில் நடைபெற்ற விழாவில் இல. கணேசன் பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் டெல்லி மேல் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நஜ்மா அப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக மத்திய அரசி நியமித்தது. இதனை அடுத்து, மேல்சபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
காலியான அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு பாஜக முத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசன் பாஜக மேலிடம் வேட்பாளராக அறிவித்தது. மேல்சபை உறுப்பினர் பதவிக்கு இல. கணேசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், காலியாக உள்ள பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இல.கணேசன், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.