
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற்று வீடு
திரும்ப வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
மண்சோறு சாப்பிட்டும், பால் குடம் ஏந்தியும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், முதலமைச்சரின் நுரையீரல் பிரச்சனை சரியாக வேண்டும் என்று வெள்ளியால்
செய்யப்பட்ட நுரையீரல் காணிக்கை செய்தும் வருகின்றனர். சர்ச் மற்றும் மசூதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடிகர் விவேக், நடிகர் விஷால் ஆகியோர் முதல்வர் ஜெ. குணம் பெற வேண்டிய சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில்
பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை அதிமுகவினர் செய்தனர். கோயில்களில் யாகம் நடத்தியும், வழிபாடு செய்தனர். இதில்
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.