"ஜெ. பூரண குணமடைந்து பிரபல சக்தியாக வருவார்..." - குருவாயூர் ஸ்ரீ சூரிய நம்பூதிரி அதிரடி பேட்டி...

Asianet News Tamil  
Published : Oct 15, 2016, 01:18 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
"ஜெ. பூரண குணமடைந்து பிரபல சக்தியாக வருவார்..." - குருவாயூர் ஸ்ரீ சூரிய நம்பூதிரி அதிரடி பேட்டி...

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண உடல்நலம் குணமடைந்து அவர், தற்போது இருப்பதைவிட மிகப்பெரிய சக்தியாக வலம் வருவார் என கேரளாவின் மூத்த  
மற்றும் பிரபலமான ஜோதிடர்களின் ஒருவரான குருவாயூர் ஸ்ரீ சூரிய நம்பூதிரிகள் தெரிவித்துள்ளார்.

கேரளாவின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ சூரிய மங்களம் தாந்திரீக வித்யா வீடம் மிக பிரசித்தி பெற்றதாகும். இங்கு தங்களது எதிர்காலத்தை
கணிக்கவும், நிகழ்காலம் குறித்து அறிந்து கொள்ளவும், உலகம் முழுவதிலும் இருந்து பலர் வந்து ஜோதிடம் பார்ப்பது வழக்கம்.

இந்த மடத்தின் பீடாதிபதி சூரிய நம்பூதிர் நேற்று நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதிக்கு வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சூரிய நம்பூதிரி,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணங்களைத் தெரிவித்தார். முதலமைச்சருடைய ஜாதகத்தில் 2017 அக்டோபர் 27
வரை நேரம் சரியில்லை என்றும், முதலமைச்சர் நலம் பெற தாந்தீரிக முறைப்படி பூஜை செய்தால் வெகு விரைவில் குணமடைந்து, இப்போது உள்ளதை விட
மிகப் பிரபலமான தலைவராக வலம் வருவார் சூரிய நம்பூதிரி உறுதிபட தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து நலமுடன் இருப்பார் என்று ஜோதிடரின் இந்த செய்தி, அதிமுக பிரமுகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!