முதலமைச்சர் விரைவில் குணமடைய “சுமங்கலி பூஜை” செய்த விஷால்

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 06:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
முதலமைச்சர் விரைவில் குணமடைய “சுமங்கலி பூஜை” செய்த விஷால்

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலமைச்சருக்கு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் மற்றும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜைகள்,  அங்கப்பிரதட்சணம், யாகங்கள், மண் சோறு சாப்பிடுதல் உள்ளிட்ட பூஜை புனஸ்காரங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டிய  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில்சுமங்கலி பூஜை நடத்தினார்.

இதில் நடிகர் விஷால் தனது  குடும்பத்தினருடன் கலந்து கொண்டு முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!