ஐஐடி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை !! குற்றம்சாட்டப்பட்ட 3 பேராசிரியர்களிடம் விசாரணை !!

Published : Nov 18, 2019, 08:37 PM IST
ஐஐடி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை !! குற்றம்சாட்டப்பட்ட 3 பேராசிரியர்களிடம் விசாரணை !!

சுருக்கம்

சென்னை ஐஐடியில் பாத்திமா லத்தீப் என்ற கேரளத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை வழக்கில் 3 பேராசிரியர்களுக்கு தொடர்பிருப்பதாக எழுந்த  குற்றச்சாட்டின் அடிப்படையில் 3 போராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கடந்த 9 ஆம் தேதி ஐஐடியில் முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார்.  மாணவி பாத்திமா லத்தீப் தனது மொபைலில் தற்கொலைக் குறிப்புகளை எழுதி வைத்திருந்ததோடு, தனது மரணத்திற்கு பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அவர் எழுதியிருந்த தற்கொலைக் கடிதத்தில் ஹேமச்சந்திரன் காரா மற்றும் மிலிந்த் பிரம்மே ஆகிய பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். மாணவி பாத்திமா கல்லூரியில் மத ரீதியிலான துன்புறுத்தல்களைச் சந்தித்து வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர்.


 
இதையடுத்து வழக்கு மத்திய குற்றப் பிரிவு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிறு என இந்த நான்கு நாட்களும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய தினம் சம்பந்தப்பட்ட அந்த 3 பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.  இந்த நிலையில்  இன்று மாலை 3 மணியில் இருந்தே ஐஐடி வளாகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் அந்த மூன்று பேராசிரியர்களிடமும்  விசாரணை நடத்தப்பட்டது..

மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தாமல். ஐஐடி வளாகத்திலேயே அந்த 3 பேராசிரியக்டம்  விசாரணை நடத்துவதற்கு காரணம் இந்த வழக்கில் பல்வேறு தரப்பிலிருந்து வரகேகூடிய அழுத்தம் காரணம் என்றும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!